சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தை பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தின் நாயகிகளாக மமீதா பாஜூ மற்றும் காயடு லோஹர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க அவருக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது.
தான் நாயகனாக நடிக்கும் படங்களில் பெறும் சம்பளத்தையே இந்த படத்தில் கேட்டுள்ளதாக சந்தானம் கூற, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், சிம்புவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளத்துக்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.