விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை 'சர்கார்' படத்தின் ஆடியோ விழாவில் கோடிட்டு காண்பிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்றுமுன் வெளியான டீசர் இதனை உறுதி செய்துள்ளது.
'சர்கார்' டீசரின் இறுதியில் 'உங்க ஊர் தலைவனை தேடிப்பிடிங்க என்ற வசனமும், இதுதான் நம்ம சர்க்கார்' என்று வசனம் பேசுவதும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மிக விரைவில் தொடங்கவுள்ளதை குறிப்பிடுகிறது.
இந்தியாவுக்கு ஓட்டு போட வந்ததாக கூறும் விஜய் தன்னுடைய ஓட்டை வேறு ஒருவர் கள்ளவோட்டாக போட்டதாக கேள்விப்படுவதும், ராதாரவியை முறைத்து பார்ப்பது, இன்னும் ஒரு நாளில் என்னென்ன மாற போகுதுன்னு ஓரமா நின்னு வேடிக்கை பார்றா, ஐ எம் அ கார்ப்பரேட் கிரிமினல் என்ற வசனத்தை ஆக்ரோஷமாக பேசுவதும் விஜய் இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் என்பதை காட்டுகிறது.
கீர்த்திசுரேஷ் இந்த டீசரில் அமைதியாக இருக்கின்றார், ஆனால் படத்தில் எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரலட்சுமிக்கு ;சண்டக்கோழி 2' படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு நெகட்டிவ் வேடம் என்பது அவரது முறைப்பில் இருந்தே தெரிகிறது
ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமான பின்னணி, கிரிஷ் கங்காதரனின் அபாரமான கேமிரா வியக்க வைக்கின்றது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஒரு தீபாவளி விருந்து ரெடி