Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1925 முதல் பாக்ஸிங் வரலாறு…. திரைக்கதை முயற்சியில் பா ரஞ்சித்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:02 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள பா ரஞ்சித் தமிழ்நாட்டில் பாக்ஸிங் தொடங்கிய காலமான 1925 ஆம் ஆண்டு முதல் அது தடை செய்யப்பட்ட காலம் வரையிலான மொத்தத்தையும் சேர்த்து ஒரு திரைக்கதை எழுதி வருகிறோம். அதை வெப் தொடராக எடுக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments