Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் படத்தில் நடிகராக சீமான்?... லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:03 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை  முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தில் ப்ரதீப்புக்கு சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சீமான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ப்ரதீப் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு தந்தையாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனராகவும் நடிகராகவும் செயல்பட்டு வந்த சீமான் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments