Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் புதிய படத்தைப் பார்த்து பாராட்டிய சீமான்!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (14:08 IST)
தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு விடுதலை வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார். இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தாலும் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் படத்தைப் பார்த்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments