96 படம் குறித்து சர்ச்சையானக் கருத்துகளை சொன்ன இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனு ராமசாமி குரல் கொடுத்துள்ளார்.
96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தியது தொடபாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது ’இது மிகவும் தவறான விஷயம். 80களில் , 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார்.
ஆனால் இதற்குப் பதிலளிக்கும் விதமாக இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடனமாடும் பல பழையப் பாடல்களின் தொகுப்பை சுட்டிக்காட்டி இதுமட்டும் ஆண்மையில்லாத தனம் இல்லையா? எனக் கேள்வியெழுப்பினர். அதைத் தொடர்ந்து இளையராஜாவை நக்கல் செய்யும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் உலாவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது.தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார்.’ எனத் தெரிவித்துள்ளார்.