Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக தெலுங்கு படத்தில் செல்வராகவன்.. வில்லனாக நடிக்கின்றாரா?

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (18:18 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
பிரபல இயக்குனர் செல்வராகவன் தமிழில்  சாணி காகிதம், பீஸ்ட், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் கோபி சந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்பதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது அவர் பிஸியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments