Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

Advertiesment
மோகன்லால்

vinoth

, புதன், 4 ஜூன் 2025 (10:42 IST)
ஏப்ரல் 25 ஆம் தேதி மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘துடரும்’ படம் ரிலிஸானது. இந்த படத்துக்குப் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆனது. அதன் காரணமாகக் கேரளாவைத் தாண்டியும் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

உலகளவில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் ‘துடரும்’ படம் மே 30 ஆம் தேதி முதல் ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் பார்த்துள்ள செல்வராகவன் “பிரமாதமான பிரமாதமான படம் ‘துடரும்’. மோகன்லால் சாரால் மட்டும்தான் இந்த படத்தில் நடிக்க முடியும். என்ன ஒரு நடிகர்.  இந்தியாவின் சிறந்த நடிகரின் நடிப்பில் உறைந்துவிட்டேன்’ எனப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!