Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன் இயக்க ஆசைப்பட்ட மல்டிஸ்டார் படம்…நடிகர் ரவி கிருஷ்ணா பகிர்ந்த தகவல்!

செல்வராகவன் இயக்க ஆசைப்பட்ட மல்டிஸ்டார் படம்…நடிகர் ரவி கிருஷ்ணா பகிர்ந்த தகவல்!
, புதன், 27 செப்டம்பர் 2023 (07:18 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார்.

அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் 7ஜி திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் ரவி கிருஷ்ணா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “பல ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜெனிலியா மற்றும் நான் என பல நடிகர்களை வைத்து புதுப்பேட்டை என்றொரு திரைப்படத்தை இயக்க முயன்றார். ஆனால் அது வேறு கதை. ஆனால் அந்த படம் நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தில் இணைந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்!