Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#மாமன்னன் படம் பார்த்த நல்லகண்ணு, ராமகிருஷ்ணன் மற்றும் அற்புதம்மாள்- உதயநிதி டுவீட்

maamannan
, சனி, 8 ஜூலை 2023 (20:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள்,  கர்ணன் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்கிய படம் மாமன்னன்.

சமீபத்தில் வெளியான இப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில், வடிவேலு . ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தை இன்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லுகண்ணு மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் பார்த்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

 

‘’#மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து தங்களுடைய பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஐயா ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கும்,  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் திரு.சி.மகேந்திரன் அவர்களுக்கும், அன்பிற்குரிய அற்புதம் அம்மாள் அவர்களுக்கும் எங்கள் அன்பும், நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''லியோ'' பட '' நா ரெடி பாடலுக்கு சிக்கல்?...சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கை குழு பதில்