இயக்குனர் ஷங்கர் கேஜிஎஃப் 2 திரைப்படத்தைப் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார்.
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.
இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படம் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குப்பின்னர் படத்தை பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் தன்னுடைய டிவீட்டில் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் “ சிறப்பான அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி.” என்று பாராட்டியுள்ளார்.