Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கீப் காம் அண்ட் ட்ரஸ்ட் லோகேஷ்" சாந்தனுவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (13:13 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர். மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஆன்ட்ரியா , நடிகர் சந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
 
பேராசிரியராக நடிக்கும் விஜய்க்கு கல்லூரி மாணவராக நடிகர் சாந்தனு நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது. இந்த தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனவுகள் நிஜமாகும் என கூறி தளபதி 64  படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கீப் காம் அண்ட் ட்ரஸ்ட் லோகேஷ் என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் "சும்மா இருங்க பாஸ் ஏத்திவிடாதீங்க என கூறி பிகில் படத்தை கம்பேர் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments