Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதனால் ஒரு *** பிரயோஜனமும் இல்ல - சாந்தனுவின் கோபமான பதிவு!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (16:59 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர மற்றும் மிகப்பெரும் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தன் திறமையை  வைத்துக்கொண்டு உண்மையான வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் இளம் நடிகர்களில் ஒருவர் சாந்தனு பாக்யராஜ்.

இவர் டிவி தொகுப்பாளினி கிகி விஜய்யை காதலித்து பெற்றோர் சமத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும்  இருவரும் தங்களது கேரியரில் அதீத கவனத்துடன் இருந்து வருகின்றனர். அந்தவகையில் இந்த கொரோனா லாக்டவுனில் சாந்தனு " கொஞ்சம் கொரோனா நிறைய காதல்" என்ற குறும்படத்தை இயக்கி அதில் மனைவியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இதையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் " ஒரு சான்ஸ் கொடு" என்ற சிங்கிள் பாடலில் நடித்திருந்த வீடியோ இன்று வெளியாகி பெருமளவில் ஹிட் அடித்துள்ளது. இத்துடன் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணத்தால் மனம் உடைந்து போன சாந்தனு இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

"கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமான பலரை இழந்து வருகிறோம். நானும் சமீபத்தில் ஒரு அன்பான நண்பனை இழந்தேன், ஒரு சக ஊழியர், அவர் இளமையாக, ஆரோக்கியமாக இருந்தார்.பிறகு இது ஏன் நடக்கிறது? இதற்கெல்லாம் கீழ் ஒரே ஒரு விஷயம் தான், மன அழுத்தம்... வாழ்க்கையை பற்றிய சிந்தனையில் நாம் அதிக மனஅழுத்தத்தை எடுத்துக்கொள்கிறோம். அதுவே ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கையை முடித்துவிடுகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விஷயங்களைப் பற்றிய பிரச்சனை நம் அனைவருக்கும் இருக்கிறது. அது ஒவ்வொன்றின் பிரச்சனையும் அவர்களுக்குப் பெரியது,  அது புரிந்துகொள்ளத்தக்கது ... ஆனால் உங்கள் வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு அல்ல! நாம் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்வோம் , நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வில் எதையாவது அடைய வேண்டுமெனில் மகிழ்ச்சியாக இருங்கள்.

மன அழுத்தம், வெறுப்பு, நெகட்டிவிட்டி என இது போன்ற  பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் ஒரு ****** பிரயோஜனம் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்ன நடக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் நடக்கும். இதை மிகுந்த அன்பு மற்றும் அக்கறையுடன் சொல்கிறேன். தயவுசெய்து எதையும் எளிதாக எடுத்துக் கொள்வோம். " என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments