வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது.
அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தி ரீமேக்கில் சிம்பு நடித்த வேடத்தில் பிரபல நடிகர் ராணா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் முன்னதாக ரவி தேஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.