சிம்பு நடிப்பில் பத்து தல என்ற படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சிம்பு கலந்துகொள்ளவில்லை.
நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளது. தற்போது கௌதம் கார்த்திக் சம்மந்தமான காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார். படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் கௌதம் கார்த்திக் பகிர்ந்துகொண்டுள்ளார்.
படத்தின் 25 சதவீதக் காட்சிகளை இப்போது இயக்குனர் கிருஷ்ணா படமாக்கி முடித்துள்ளார். விரைவில் சிம்பு சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் திரைக்கதையில் பல மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர். அதில் ஒன்றாக படத்தில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படப்புகழ் ரெட்டின்ஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.