சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல படம் இறுதிகட்ட ஷூட்டிங்கில் உருவாகி வருகிறது.
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.
இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதையடுத்து சிம்பு நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தி இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.
முதலில் இந்த படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்ப்பட்டது. ஆனால் இப்போது ரிலீஸ் இப்போது அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.