Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி அதிரடி நீக்கம்! காரணம் என்ன?

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி அதிரடி நீக்கம்! காரணம் என்ன?
, ஞாயிறு, 18 நவம்பர் 2018 (14:17 IST)
கடந்த இரண்டு மாதங்களாக வைரமுத்து மீது சின்மயி கூறிய மீடூ பிரச்சனை காரணமாக அவர் ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்தார். சின்மயி குற்றச்சாட்டுக்கு பெரும்பாலான திரையுலகினர் ஆதரவு கொடுக்கவில்லை. திரையுலகில் நடக்கும் தவறுகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றும், விளம்பரத்திற்காக பல வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்றே பலர் அறிவுரை கூறினர்

இந்த நிலையில் பாடகி சின்மயி திடீரென டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்து வந்த சின்மயி இனிமேல் டப்பிங் செய்ய முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.

webdunia
இதுகுறித்து டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரன் என்பவர் கூறியபோது, 'சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான் என்றும் அவர் யூனியனுக்கு இரண்டு வருடமாக சந்தா செலுத்தவில்லை என்றும் இதுகுறித்து அனுப்பபட்ட கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லாததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் யூனியனில் உள்ள எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் இல்லை என்றும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 31ம் தேதிக்குள் புது வருடத்திற்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சின்மயி உண்மையிலேயே சந்தா கட்டாததால்தான் நீக்கப்பட்டாரா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பதும் இனிமேல் தான் தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

OMG ….சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்கினால் பாப் கார்ன் இலவசம்!