Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் இல்லாமல் படத்திற்கு பூஜை போட்டு முடித்த சிவா??

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (21:32 IST)
அஜித்தின் 58வது படமான விஸ்வாசம் படத்தின் பூஜை முடிந்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.
 
இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பூஜை சத்தமில்லாமல் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது.
 
ஆனால், இந்த படத்தில் அஜித் இல்லை. எனவே, அஜித் இல்லாமால் படத்தின் பூஜையை முடித்துவிட்டார் சிவா என பேச்சு அடிப்பட்டது. ஆனால், விசாரித்து பார்த்ததில், சிவாவின் அலுவலகத்திற்கு பூஜை போடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments