சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளில் இருந்து தூக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கில் இந்த படம் சுத்தமாக படுத்துவிட்டதாம்.
இதையடுத்து இந்த படத்தை வாங்கியுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நவம்பர் 25 ஆம் தேதி இரு மொழிகளிலும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.