Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் இதை 'துப்பறிவாளன்' ரிலீசின்போது செய்திருக்கலாமே!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (23:59 IST)
ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி விதிப்பு பிரச்சனை திடீரென முளைத்த பிரச்சனை அல்ல. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருந்து வரும் பிரச்சனை. இந்த பிரச்சனைக்காக விஷால் திடீரென தற்போது புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று அறிவித்திருப்பது தகாத செயல் என்று ஒருசில தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.



 
 
வரும் வெள்ளியன்று 'விழித்திரு' உள்பட ஒன்பது சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்தன. புரமோஷன் செலவாகவே ஒவ்வொரு தயாரிப்பாளரும் சில லட்சங்களை கொட்டியிருந்தனர்.
 
இந்த நேரத்தில் திடீரென படங்கள் வெளியீடு இல்லை என்று தங்களிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக விஷால் அறிவித்துள்ளார். இதை அவர் 'துப்பறிவாளன்' படம் ரிலீசாகும்போது செய்திருக்கலாமே? துப்பறிவாளன் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து தியேட்டர்களை விட்டு தூக்கும் நிலை வரும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று சில தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments