டிசம்பர் மாத இறுதியில் ஒரே நாளில் ஆறு படங்கள் வெளியாகி போட்டிப் போட்டதைப் போல பிப்ரவரி மாதத்திலும் அதிகப்படங்கள் ரிலிஸுக்காகக் காத்திருக்கின்றன.
சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ஒரே நாளில் மாரி 2, சீதக்காதி, அடங்கமறு, கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கே ஜி எஃப் ஆகிய ஆறு படங்களும் போட்டிபோட்டு இறங்கி தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை உருவானது. அது மாதிரியான் சூழ்நிலை இப்போது மீண்டும் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஜனவரி மாதம் முழுவதும் பேட்டயும் விஸ்வாசமும் தியேட்டர்களைப் பங்கிட்டுக் கொண்டதால் பிப்ரவரி மாத ரிலிஸ் கோதாவில் இப்போது பல திரைப்படங்கள் இறங்கியுள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி சிம்பு நடித்துள்ள வந்த ராஜாவாதான் வருவேன் மற்றும் ராம் இயக்கி பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து பரிசு பெற்ற பேரன்பு மற்றும் ஜி வி பிரகாஷ்குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் ஆகியப் படங்கள் இதுவரை ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல காதலர் தினத்தன்று பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வர்மா மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டூலெட் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியப் படங்களையும் ரிலிஸ் செய்யும் முனைப்பில் உள்ளனர்.
ஜனவரி 26 ஆம் கார்த்தி நடிக்கும் தேவ் படம் ரிலிஸாகும் எனத் தெரிகிறது. இதனால் பிப்ரவரி 1 ஆம் தேதி ரிலிஸ் அறிவிக்கப்பட்டுள்ள படங்களுக்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.