Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமா காணாத திரைப்படம்… அனைவருக்கும் நன்றி- சோனியா அகர்வால் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (08:05 IST)
காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் நடிகை சோனியா அகர்வால் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களின் வரிசையில் எப்போதும் காதல் கொண்டேனுக்கு தனி இடம் உண்டு. அந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு செல்வராகவன் என்ற மிகத்திறமையான இயக்குனரும் சோனியா அகர்வால் என்ற கதாநாயகியும் கிடைத்தனர். மேலும் அந்த படத்தின் வெற்றிதான் யுவன் ஷங்கர் ராஜாவை முன்னணி இசையமைப்பாளராக மாற்றியது.

தற்போது அந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் முடிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த படத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து அப்படத்தின் கதாநாயகியான சோனியா அகர்வால் ‘கடவுளுக்கு நன்றி. செல்வராகவன், கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நன்றி. நான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. காதல் கொண்டேன் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு நிகரில்லாத சினிமா’ எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments