Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கார்த்தி & நலன் குமாரசாமி இணையும் படம்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (08:13 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து நலன், கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று பூஜையோடு இந்த படம் தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments