Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் கருடன் பட ரிலீஸ் தள்ளிவைப்பா? பின்னணி என்ன?

vinoth
புதன், 6 மார்ச் 2024 (07:31 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் மார்ச் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தின் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் முடியவில்லையாம். இந்த படத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திய டிஸ்னி நிறுவனம் ஜியோவோடு இணைய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் டிஜிட்டல் பிஸ்னஸ் முடிய தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments