சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 70வது பிறந்தநாள் நாளை வெகு சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ கதையை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெப்சீரியஸாக இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த வெப்சீரீஸ் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ள அவர் முற்றிலும் புதுமுகங்களை இந்த வெப்சீரிஸ் கேரக்டர்களுக்காக தேடி வருகிறார்.
இந்த நிலையில் நாளை தனது தந்தை ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை அடுத்து ஒரு புதிய இணையதளத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கவுள்ளார். இந்த இணையதளத்தில் தனது பொன்னியின் செல்வன் வெப் சீரியஸ் குறித்த அனைத்து தகவல்களையும் அவர் பகிர போவதாகவும் இந்த இணையதளம் தான் இயக்கும் பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் குறித்த அனைத்து விஷயங்களையும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரஜினி மகளின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது