Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இறுதியஞ்சலி சர்ச்சை: வேலைவெட்டி இல்லாதவர்களின் புலம்பலால் எஸ்பிபி ரசிகர்கள் வருத்தம்!

இறுதியஞ்சலி சர்ச்சை: வேலைவெட்டி இல்லாதவர்களின் புலம்பலால் எஸ்பிபி ரசிகர்கள் வருத்தம்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:53 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் மறைந்த நிலையில் அவருடைய மறைவிற்கு உண்மையாகவே திரையுலகை சேர்ந்த அனைவருமே இரங்கலும் அஞ்சலியும் செலுத்தினர். முடிந்தவர்கள் நேரிலும் முடியாதவர்கள் வீட்டிலேயே எஸ்பிபி படத்தை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்
 
ஆனால் ஒருசில வேலைவெட்டி இல்லாதவர்கள் யூடியூப் வீடியோக்களில் எஸ்பிபிக்கு சில பிரமுகர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்ற சர்ச்சையை எழுப்பி வருகின்றனர். எஸ்பிபியால் பலன் அடைந்த பலர் வீட்டுக்குள்ளே இருந்து விட்டதாகவும் அவர்களுக்கு எஸ்பிபி மீது உண்மையான பாசம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் ஏற்படும் தர்மசங்கடங்கள் பல இருப்பதால் எஸ்பிபி குடும்பத்தினர்களும், காவல்துறையினர்களும் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டனர் என்பதுதான் உண்மை
 
மேலும் எஸ்பிபிக்கு நேரடியாக அஞ்சலி செலுத்துவதும், வீட்டில் இருந்தே அஞ்சலி செலுத்துவதும் அல்லது அஞ்சலியே செலுத்தாமல் இருப்பதும் அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இதை கேள்வி கேட்க யாருக்கும் தார்மீக உரிமை இல்லை
 
இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ளாமல் தனக்கு தானே பத்திரிகையாளர்கள் என்று கூறி கொள்ளும் சிலர் யூடியூபில் இவர்கள் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? அவர்கள் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்றும் தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வருகிறார்கள். உண்மையில் இவ்வாறு பேசுபவர்கள் எஸ்பிபிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்களா? என்ற கேள்வியை எஸ்பிபியின் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் மீண்டும் தொடங்குகிறது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு!