Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் கணவருக்கு நான் கொடுத்த மகத்தான பரிசு! வாழ்நாளில் மறக்கவே மாட்டார்!

Advertiesment
Super singer Rajalakshmi
, புதன், 10 ஏப்ரல் 2019 (19:22 IST)
பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியதன்  மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது. 
 
சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க சினிமா படங்களில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்து, செந்தில் - ராஜலட்சுமி  தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நட்புற பாடகர்களாக வலம் வருகின்றனர். அஜித் விஸ்வாசம் படத்தில் கூட இவர்கள் பாடல் பாடியிருந்தனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய  தன்னுடைய கணவர் செந்திலுக்கு  அவரே எதிர்பார்க்காத மகத்தான பரிசு ஒன்று கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜலட்சுமி. இதுகுறித்து பேசிய ராஜலட்சுமி, பொதுவாகவே என் பிறந்தநாளுக்கு அவரும், அவர் பிறந்தநாளுக்கு நானும் எந்த சர்ப்ரைஸும் பண்ணிக்க மாட்டோம். அவர் ரொம்ப நாளா ஆர்மோனிய பெட்டி வாங்கணும்னு சொல்லிட்டே இருந்தார். ஆர்மோனியப் வாங்குறது பெரிய விஷயமில்லை. கடைக்குப் போனா வாங்கிக்கலாம். ஆனா, இசைத்துறையில் மிகப் பெரிய வித்வானாக இருப்பவர்களின் கையால் ஆர்மோனியத்தை வாங்கினால் அது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்னு அவர் சொல்லிட்டே இருந்தார். 
 
Super singer Rajalakshmi

 
அந்த நேரத்தில் தான்  இசைஞானி இளையராஜாவின் அலுவலகத்தில் இருந்து வாய்ஸ் டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க. ஐயாகிட்ட, அப்போது ஏன் கணவரின் பிறந்தநாளுக்காக அவரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நினைத்து ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் வாங்கி பரிசாக கொடுத்தேன். அதனை ஐயா அவர் கையால் என் கணவருக்கு கொடுக்கும் போது அவர் அவ்வளவு சந்தோசப்பட்டார் என கூறி நெகிழ்ந்தார் ராஜலட்சுமி . 

Super singer Rajalakshmi

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"தர்பார்" பட காமெடி நடிகர் இவர் தான்! ரஜினியின் முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தான்!