Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் படம் தியேட்டரில் ரிலீஸாக அனுமதி இல்லை !!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:29 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதியில்லை என கேரள பிலிம் சேம்பர் கூறியிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்,மீனா நடிப்பில் உருவாகியுள்ள படம் த்ரிஷ்யம்

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியாகி  வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில். தற்போது த்ரிஷ்யம் 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படம் வரும் 19 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. அதேசமயம் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய த்ரிஷ்யம் படக்குழு முடிவெடுத்துள்ளது.

மோகன்லால் ஓடிடியில் படம் வெளியான பின் தியேட்டரில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் கேரள பிலிம் சேம்பர் த்ரிஷ்யம் 2 படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதி மறுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து கேரள பிலிம் சேம்பர் கூறியுள்ளதாவது : ஓடிடியில் வெளியாகும் எந்தப் படத்தையும் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கமுடியாது..இது சூப்பர் ஸ்டாருக்கும் புதுநடிகருக்கும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments