Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா வேண்டாம் என்ற படத்தில் நடிக்க ஆசைப்படும் தனுஷ்… சுதா கொங்கராவின் அடுத்த பட அப்டேட்!

vinoth
திங்கள், 1 ஜூலை 2024 (11:32 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” என அறிவித்தனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைப் பற்றியறிந்த தனுஷ் அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய அடுத்த படமாக புறநானூறு படம்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதனால் அவர் தனுஷுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றி அந்த படத்தை சுதா கொங்கரா இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments