தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரை வைத்து பிரபல தெலுங்கு இயக்குனர் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்து, சமீபத்தின் இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், கார்த்திகேயா 2 பட இயக்குனர் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்த நிலையில், சூர்யாவும் நடிக்கவுள்ளார்.
கார்த்திகேயா 2 பட இயக்குனர் சந்து மொண்டேட்டி, இயக்கும் ஒரு சோசியல் பேண்டஸி படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின் இப்படம் தொடங்கும் என தெரிகிறது.