நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்க்கு வரும் என்று கூறப்பட்டது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால் தீபாவளி அன்று இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 'என்.ஜி.கே' படக்குழுவினர் இந்த படத்தை முடிக்க இரவுபகலாக உழைத்து வருகின்றனர். சூர்யாவின் ரசிகர்களை திருப்தி செய்ய அதிகபட்ச உழைப்பை படக்குழுவினர் கொடுத்து வந்தபோதிலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு பின்னரே ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. ரிலீஸ் தேதியை இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எனவே வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'சர்கார்' மட்டுமே வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.