மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதனால் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன எனக் கூறி இருந்தார்.
ஆனால் இப்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து ரஜினி படத்தை இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அதனால் கைதி 2 எப்போது வரும் என்று தெரியவில்லை.
ரஜினி படத்தை முடித்துவிட்டு அவர் கைதி 2 திரைப்படத்தை லோகேஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, அந்த படத்தில் எப்படியாவது சூர்யாவைக் கொண்டுவர வேண்டும் என ஆசைப்படுகிறாராம். அதனால் எப்படியாவது அதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டுவரும் படி லோகேஷிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.