Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 6 June 2025
webdunia

ஜூலையில் தொடங்கும் சூர்யாவின் அடுத்த பட ஷூட்டிங்… ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இல்லையாம்!

Advertiesment
சூர்யா

vinoth

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (12:44 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படம் வரும் வியாழக் கிழமை ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியவுள்ளதாம். அதன் பின்னர்தான் அக்டோபர் மாதம் சூர்யா & வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”என் சுச்சாவை நானே குடிச்சேன்.. காயம் குணமாயிட்டு” - பிரபல பாலிவுட் நடிகரின் சிறுநீர் வைத்தியம்!