Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தைக் கௌரவித்த தமிழக அரசு!

Advertiesment
எஸ் பி பாலசுப்ரமணியம்

vinoth

, புதன், 12 பிப்ரவரி 2025 (09:48 IST)
1966 ஆம் ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடகராக இருந்தவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் . இவர்  தனது திரை வாழ்க்கையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடி சாதனைப் படைத்துள்ளார். இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன்   விருதுகள் வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி ஆறு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பொதுமக்கள் பெருவாரியாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு 'எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரது மகன் எஸ்பிபி சரண், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதையேற்று இப்போது அந்த தெருவுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை வச்சு 300 கோடி ரூபாய்ல படம் பண்ணி 500 கோடி ரூபாய் சம்பாதிக்குறது பெருசில்ல… இயக்குனர் சுசீந்திரன் கருத்து!