Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை… இவர்தானாம்!

பா ரஞ்சித் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை… இவர்தானாம்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:30 IST)
பா ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

அட்டக்கத்தி படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தலித் அரசியல் உரையாடலை பேசி இப்போது வரை அதை முன்னெடுத்து செல்லும் பா ரஞ்சித்தின் முதல் படம். இந்த படத்தில்தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதிலிருந்து அவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சமிபத்தில் எழுந்த தெருக்குரல் அறிவு, ஷான் டி வின்சண்ட் பால் மற்றும் தீ சம்மந்தப்பட்ட பிரச்சனையேக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பா ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது. ரஞ்சித் படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் சில தனியிசைப் பாடல்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை ரிலிஸ் எப்போது? வெளியான தகவல்!