விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
மூனாரில் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் லோகேஷ் எப்படி விக்ரம் படத்துக்கு ஒரு ப்ரமோஷன் டீசர் வீடியோவை வெளியிட்டு பட அறிவிப்பை வெளியிட்டாரோ, அதுபோல தளபதி 67 படத்தையும் ஒரு டீசரோடு அறிவிக்க உள்ளாராம். இதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.