முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படம் வரும் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று தலைவி படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனது என்பதும் இது குறித்த விழாவிற்கு மும்பையில் இருந்து நடிகை கங்கனா ரனாவத் சென்னைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்ய திடீர் சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது
தியேட்டரில் ரிலீஸ் ஆகி நான்கு வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டதால் தமிழ் தெலுங்கு மொழிகளில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை
ஆனால் தலைவி படத்தின் இந்தி வெர்ஷனை இரண்டு வார இடைவெளியில் ஓடிடியில் வெளியிட வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் பிடிவாதமாக இருப்பதால் அங்கு உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்சனை செய்வதாக தெரிகிறது