Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் கோட் படத்தில் பவதாரணி குரலில் ஒரு பாடல்… யுவன் எடுத்த முடிவு!

விஜய்யின் கோட் படத்தில் பவதாரணி குரலில் ஒரு பாடல்… யுவன் எடுத்த முடிவு!

vinoth

, வெள்ளி, 14 ஜூன் 2024 (16:38 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்துள்ளனர். இதனால் பாடல்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே ரிலீஸான விசில் போடு பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த பாடல்களை எப்படியும் ஹிட்டாக்கி விடவேண்டுமென யுவன் கடுமையாக உழைத்து வருகிறாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த பாடகியும் தன்னுடைய சகோதரியுமான பவதாரணி குரலில் ஒரு பாடலை ஏ ஐ தொழில்நுட்பத்தில் யுவன் உருவாக்க உள்ளாராம். இந்த படம் ஒர் மென்மையான மெலடி பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி ஷூட்டிங்கைக் கண்டுகொள்ளாத அஜித்…. இதுதான் காரணமா?