லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தில் கைதி படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பெற்றுள்ளார். அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை இப்போது அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.