Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பளர் தனஞ்செயன் கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (13:27 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் உள்ளது.

இந்நிலையில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் “தேர்தல் தேதி பிரித்து ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும்  முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம். மிகப்பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் தங்கலான் படத்தின் ரிலீஸ் மற்ற மாநிலங்களிலும் முக்கியம் என்பதால் சரியான ரிலீஸ் தேதி முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments