பிரபல நடிகர் மக்களுக்கு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார்.அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றிவருகின்றனர். இருப்பினும் கோவை, திருப்பூரில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்ததால் அங்கு புதிய ஊரடங்கு உத்தவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து வருகின்றனர்.
எனவே மெட்ரோ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சிரிஷ், இவர்து அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்ற முகாவில் 185 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 100 பேருக்கு மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது. இரண்டாவது முகாமில் சுமார் 196 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3வது முகாமில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.