Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த படத்தைதான் உல்டா பண்ணி “GOAT” படத்தை இயக்கி வருகிறாரா வெங்கட் பிரபு?

இந்த படத்தைதான் உல்டா பண்ணி “GOAT” படத்தை இயக்கி வருகிறாரா வெங்கட் பிரபு?
, திங்கள், 1 ஜனவரி 2024 (07:14 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தின் தலைப்பு “The greatest of all time” என்று வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியான தி ஜெமினி மேன் என்ற படத்தின் கதையைத் தழுவிதான் இந்த படத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தளபதி 68’ படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. இரட்டை வேட சூப்பர் கெட்டப்..!