Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

Advertiesment
AVM Saravanan

Bala

, வெள்ளி, 5 டிசம்பர் 2025 (11:35 IST)
தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். முதலில் காரைக்குடியில் இதன் ஸ்டூடியோவை ஆரம்பித்த மெய்யப்ப செட்டியார் அதன் பிறகு சென்னையில் ஆரம்பித்தார். அதிலிருந்து படங்களை தொடர்ந்து தயாரிக்க ஆரம்பித்தார். வாழ்க்கை திரைப்படம் இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது.
 
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களை வைத்து எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனம். மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு இந்த நிறுவனத்தை இன்று வரை சிறந்த முறையில் வழி நடத்தியவர் ஏவிஎம் சரவணன். சகோதரர்கல் நான்கு பேர் இருந்தாலும் சரவணனுக்கு இருக்கிற மரியாதை மதிப்பே வேறு. 
 
ஏவிஎம் சரவணனின் தனித்தன்மை என்னவென்றால் எப்போதுமே கையை கட்டிக் கொண்டுதான் இருப்பார். பொதுவெளியில் எங்கு போனாலும் இப்படித்தான் இருப்பார். வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை என்னவென்றால் எம்ஜிஆர் ஏவிஎம் சரவணனுக்கு ஷெரிஃப் பதவியை கொடுத்ததுதான். ஓராண்டு காலம் மதிப்புடைய இந்த பதவியை தமிழகத்தில் இருந்து பெற்ற முதல் நபர் ஏவிஎம் சரவணன் தான்.
 
முதலில் இந்த பதவிக்கு ஏவிஎம் சரவணன் மறுத்திருக்கிறார். இருந்தாலும் எம்ஜிஆர் கேட்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எப்பேர்பட்ட தயாரிப்பாளர்களாக இருந்தாலும் நடிகர்களின் வீட்டுக்கு சென்று அட்வான்ஸ் கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்கள்.ஆனால் ஏவிஎம் சரவணனை பொறுத்தவரைக்கும் எந்த நடிகர் வீட்டுக்கும் சென்று அவர் அட்வான்ஸ் கொடுத்ததே இல்லை.
 
அவர்களை தன் வீட்டிற்கு வரவழைத்தே அவர் அட்வான்ஸ் கொடுத்து வந்தார். அதே போல் எந்த காலத்திலும் ஏவிஎம் பிரம்மாண்டமான முறையில் அழைப்பிதழ் அடித்ததே இல்லை. முன்பெல்லாம் பாட்டு புத்தகம் அடிப்பார்கள். அந்த பாட்டு புத்தகத்தில் புதுமையை காட்டியவர் ஏவிஎம் சரவணன். இப்போது அந்த கலாச்சாரம் இல்லை. பெரும்பாலான படங்களில் சாவு ஊர்வலம் இருக்கும்.
 
ஆனால் ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் அந்த மாதிரியான காட்சிகள் இடம்பெறாது. சென்டிமென்டா அதை காட்டமாட்டார் மெய்யப்ப செட்டியார். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் எம்ஜிஆருக்கு வலது கையாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். அவரை படம் தயாரிக்க தூண்டியதே மெய்யப்பசெட்டியார்தானாம். எவ்வளவு நாள்தான் எம்ஜிஆருக்கே உழைத்து கொடுக்கப் போற? நீயும் எம்ஜிஆரை வைத்து படம் எடு என வீரப்பனுக்கு பைனான்ஸ் செய்ததும் மெய்யப்பசெட்டியார்தானாம். இப்படி பலருக்கும் தெரியாத ஏவிஎம் நிறுவனத்தை பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே