இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி, “வாண்டு” என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இப்படம் தொடர்பாக இயக்குனர் ஷாஜி கூறுகையில், 1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் கதை. வடசென்னை குப்பத்து மக்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதேநேரம் திரைக்கதையும் விறு விறுப்பாக இருக்கும் என்றார்.
இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.