Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் 168 படத்தில் குஷ்பு-மீனா: இதில் ஒளிந்து இருக்கும் முக்கிய ரகசியம்

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (21:08 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதையும் இந்த பூஜையில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குஷ்பு, மீனா ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக வெளிவந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
 
ரஜினிக்கு ஜோடியாக இரண்டு நடிகைகளும் நடிக்கிறார்கள் என்ற செய்தியே பல்வேறு ஊடகங்களில் வெளிவந்தது. ஆனால் சற்று முன் வெளிவந்த தகவலின்படி மீனா, குஷ்பு ஆகிய இருவரில் ஒருவர்தான் ரஜினிக்கு ஜோடி என்றும், இன்னொருவர் பிரகாஷ்ராஜுக்கு ஜோடி என்றும் கூறப்படுகிறது. அனேகமாக பிரகாஷ் ஜோடியாக குஷ்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
 
இந்த தகவலை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாகவும் ஆனால் படக்குழுவினர்களில் ஒருவரிடம் இருந்து இந்த ரகசியம் கசிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments