Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகுமார் குடும்பத்தின் படங்களை திரையிட மாட்டோம்: திரையரங்க உரிமையாளர் சங்கம்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (19:50 IST)
சிவகுமார் குடும்பத்தின் படங்களை திரையிட மாட்டோம்
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் சூர்யா உள்பட அவருடைய குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர் 
 
மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட அவரது குடும்பத்தினர் திரைப்படங்களை திரையிட மாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை தி நகரில் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது ’நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை’ என்று கூறினார்
 
மேலும் அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறிய அவர் ஓடிடியில் படம் வெளியாவதால் தங்களுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்ததாகவும் ஆனால் அவ்வாறு வெளியாகும் படங்கள் தோல்வியை தழுவி இருப்பது மக்கள் திரையரங்கில் தான் படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments