Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் திறக்கப்படுகிறது தியேட்டர்கள்: என்னென்ன நிபந்தனைகள் இருக்கலாம்?

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:05 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் தியேட்டர்கள் திறக்கவும் அனுமதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது இருப்பினும் தியேட்டர்கள் திறந்தால் ஒரு சில நிபந்தனைகள் கண்டிப்பாக விதிக்கப்படும் என தெரிகிறது
 
3 இருக்கைகளுக்கு ஒருவர் மட்டுமே உட்கார வேண்டும் என்பதும், ஏசி வெப்பநிலையை 24 டிகிரிக்கு வைக்க வேண்டும் என்றும், இரண்டு அடுக்கு முகக்கவசம் அணிய பார்வையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
அதேபோல் தனியாக இருக்கும் தியேட்டர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இடைவேளையின் போது ஒவ்வொரு பார்வையாளரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள தியேட்டர் நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஏராளமான படங்கள் ரிலீசுக்கு தயார் ஆக இருப்பதால் தயாரிப்பாளர்களின் கோடிக்கணக்கான பணம் தற்போது முடங்கி உள்ளது. இதனை அடுத்து திரையரங்குகள் திறந்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments