தன் 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், தன் சுயசரிதையை ‘Notes of Dream' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
 
									
										
			        							
								
																	
	 
	அப்போது பேசிய அவர், “அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது.  நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். அதன்பின் பல நிகழ்வுகள் என் வாழ்வில்  நடந்து கொண்டிருந்தது. 
 
									
											
									
			        							
								
																	
	 
	அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தது, அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்த எண்ணம் ஒருவிதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்? என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தின” என தெரிவித்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	மேலும் ”என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தின” என ஏ.ஆர். ரகுமான் தன் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.