கமல்ஹாசன் - சிம்பு நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் இன்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று இந்த படம் வெளியான நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது வழக்கமான பழிவாங்கல் ரக கதையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாகம் மிகவும் மெதுவாக நகர்வதாகவும், இரண்டாம் பாகம் அதிகமான சண்டைக் காட்சிகளுடன் உள்ளதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கு அனைத்து பக்கமும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. படத்தின் மிகப்பெரிய சப்போர்ட்டாக பிண்ணனி இசையும் பாடல்களும் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
சில சினிமா விமர்சகர்கள் மணிரத்னம் சிறுத்தை சிவா போல படம் எடுக்க முயற்சித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடைதான் Thug Life என்று கிண்டலாக கூறியுள்ளனர்.
இந்த படத்தை பார்த்தால் நாயகனை மறந்து விடுவீர்கள் என கமல்ஹாசன் கூறியிருந்த அளவிற்கு இந்த படத்தில் கமலின் கதாப்பாத்திரம் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. மன ஆறுதலாக சிம்புவின் கதாப்பாத்திரமும், நடிப்பும் படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துவதாக கூறுகின்றனர்.
Edit by Prasanth.K