Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தேர்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திடீர் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (09:51 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் ஜூலை 30வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது
 
ஆனால் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்களும் செல்ல வேண்டியிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 19ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
அதிமுக ஒரே ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் இன்னும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடனும் ஏற்கனவே 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள திமுக, 38வது தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனும் பிரச்சாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் பரபரப்புடன் இருக்கும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments